Tuesday, 29 November 2011

surya-aircel-iphone-4s-launch-photos


surya-aircel-iphone-4s-launch-photos












by
A_S



--
Posted By ACTORSURYA`SAUDIQ-7TN09BE5005 to ACTOR SURYA`S AUDI Q-7 TN09BE5005 on 11/29/2011 07:03:00 PM

Monday, 14 November 2011

பைக் திருட்டை தடுக்கும் 'டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம்': தமிழக வாலிபர் கண்டுபிடிப்பு

Digital Locking system for Bikes
கள்ளச்சாவி போட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்படுவதை தடுக்கும் அதிநவீன 

சாதனத்தை திருக்கோவிலூரை சேர்ந்த எஞ்சினியரிங் பட்டதாரி வடிவமைத்துள்ளார். இந்த 

சாதனம் விரைவில் வர்த்தக ரீதியில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக அவர் 

தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர் சென்னையிலுள்ள 

தனலட்சுமி எஞ்சினியரிங் கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையில் 

பட்டப் படிப்பை முடித்துள்ளார்.

இந்த நிலையில், இவர் பைக்குகள் திருட்டுப் போவதை தடுக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட மின்னணு சாதனத்தை 

வடிவமைத்துள்ளார். டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் என்று பெயரிட்டுள்ள இந்த சாதனத்தை பைக்குகளில் 

பொருத்திவிட்டால், கள்ளச்சாவி போட்டோ அல்லது ஒயரை இணைத்தோ பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியாது.

மேலும், வண்டியின் உரிமையாளர் ஒரிஜினல் சாவியை போட்டாலும், ஸ்பீடோ மீட்டர் கன்சோலில் பொருத்தப்படும் 

பட்டன்களில் ரகசிய குறியீட்டு எண்களை (பாஸ் வேர்டு) பதிவு செய்தால் மட்டுமே பைக்கை ஸ்டார்ட் செய்ய முடியும்.

மேலும், இந்த கருவி ஸ்பார்க் ப்ளக்கையும் கட்டுப்படுத்துவதால் எந்த வகையிலும் எஞ்சினை ஸ்டார்ட் செய்ய முடியாது 

என்று அடித்து கூறுகிறார் கார்த்திக். மேலும், தவறான பாஸ்வேர்டை பதிவு செய்து வண்டியை எடுக்க முயன்றால் அலாரம் 

அடித்து உரிமையாளரை இந்த சாதனம் உஷார்படுத்திவிடும்.

தனது கண்டுபிடிப்புக்கு கார்த்திக் காப்புரிமையையும் பெற்றுள்ளார். மேலும், வாகன நிறுவனங்களுக்கு தனது கண்டுபிடிப்பு 

குறித்து தெரியப்படுத்தியுள்ளார். வர்த்தக ரீதியில் தனது கண்டுபிடிப்பை தயாரித்து வழங்கவும் தயாராக இருப்பதாகவும் 

அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கார்த்திக் கூறுகையில்,"சிறு வயது முதலே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னுள் இருந்தது. 

இந்த ஆர்வமே டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் கண்டுபிடித்தற்கு முக்கிய காரணம்.

எனது கண்டுபிடிப்பு குறித்த விபரங்களை பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளேன். வர்த்தக ரீதியில் 

இந்த சாதனத்தை விற்பனை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். 

பைக் திருட்டை தடுப்பதற்கு டிஜிட்டல் பைக் லாக்கிங் சிஸ்டம் நிச்சயம் பேரூதவி புரியும். மார்க்கெட்டில் விற்பனை 

செய்யப்படும் பிற சாதனங்களை காட்டிலும் இது முற்றிலும் வேறுபட்டதாகவும், 100 சதவீதம் பாதுகாப்பானதாகவும் 

இருக்கும்.

இருசக்கர வாகனங்களில் இந்த சாதனத்தை பொருத்துவதற்கு ரூ.700ம், கார்களுக்கு பொருத்த ரூ.2,000மும் செலவாகும்.

மேலும், கார்களில் பொருத்தப்படும் சாதனத்தில் கார் திருடப்பட்டால் அதுகுறித்து உரிமையாளருக்கு மொபைல்போனுக்கு 

எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியும் உள்ளது," என்று கூறினார்.

தனது கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியில் விற்பனை செய்ய இருப்பதாக கார்த்திக் நம்மிடம் தெரிவித்தார். இந்த சாதனத்தை 

பெறுவது குறித்த விபரங்களுக்கு 09894282845 என்ற மொபைல் எண்ணிலும், kartikplayer@gmail.com என்ற இமெயில் 

முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

by
A_S

2011 சினிமா... ஜூன் வரை ரிலீஸ் 65... தேறியவை வெறும் எட்டு!

பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மெண்ட் வீக் என்பாரே வடிவேலு... அதற்கு சரியான உதாரணம் 
தமிழ் சினிமாதான்!

இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவின் மார்க்கெட் பரந்து விரிந்துவிட்டது. அதற்கு முக்கிய 

காரணம் இந்திய சினிமாவின் அடையாளமாகப் பார்க்கப்படும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் 

அவரது படங்களை பார்த்துப் பார்த்து செதுக்கும் கமர்ஷியல் விற்பன்னர்களும்தான்.

இந்த மார்க்கெட்டை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு மட்டுமே இன்றைய 

ஹீரோக்கள், இயக்குநர்களுக்கு உள்ளதே தவிர, படங்களில் நல்ல கதை, செறிவான 

காட்சிகளை அமைப்பதில் இல்லை என்பதே வருத்தம் தரும் உண்மை. 

மாஸ் படம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத்தனமாக படங்களை எடுத்து மக்களை வெறுப்பேற்றுவது அதிகரித்து 

வருகிறது. உதாரணம் தனுஷ் நடித்த மாப்பிள்ளை, வேங்கை!

இதன் காரணமாக, தமிழ் சினிமா வளர்ந்த வேகத்திலேயே பெரும் வீழ்ச்சி கண்டு தயாரிப்பாளர்களின் தலையில் துண்டு 

போட வைக்கிறது.

2011 தமிழ் சினிமாவின் முதல் அரையாண்டுக்கான லாப நஷ்டக் கணக்கு என்று பார்த்தால், நாம் மேலே சொன்னது எந்த 

அளவு உண்மை என்பது புரிய வரும். 

இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி ஜூன் 30ம் தேதி வரை வெளியான நேரடி தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை (ஆங்கில, 

தெலுங்கு, இந்தி டப்பிங் படங்கள் சேர்க்கப்படவில்லை) 65. 

இவற்றில் சூப்பர் ஹிட் என்று பார்த்தால் இரண்டு படங்கள்தான். ஒன்று ஜீவாவின் கோ. இரண்டாவது கார்த்தி நடித்த 

சிறுத்தை.

ஹிட் ரகம் என்றால், பாலாவின் அவன் இவன், சிம்பு நடித்த வானம், விஜய்யின் காவலன் போன்றவற்றைச் சொல்லலாம். 

6 தேசிய விருதுகளை வென்றாலும், சன் பிக்சர்ஸின் மெகா விளம்பரங்களை கழித்துவிட்டுப் பார்த்தால் ஆடுகளம் பாக்ஸ் 

ஆபீஸில் மகா சுமார் படம்தான். ஆரண்ய காண்டம் பெரிதாக பாராட்டப்பட்டாலும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியைத் 

தழுவியது.

சுசீந்திரனின் அழகர்சாமியின் குதிரை குறிப்பிடத்தக்க படமாக நின்றது. ஓரளவு நன்றாகவும் போனது.

விமல் நடித்த எத்தன், விஷ்ணு நடித்த குள்ளநரிக் கூட்டம் போன்றவை முதலுக்கு மோசமில்லாமல் ஓடின.

வேறு எந்தப் படமும் இந்த 6 மாதங்களில் முதல் இரு வாரம் கூட தாக்குப் பிடிக்கவில்லை. இன்றைய நிலவரப்படி 100 

நாட்கள் ஓடினால்தான் வெற்றி என்று சொல்ல முடியாது. முதல் இரண்டு வாரங்கள் நல்ல வசூல், போட்ட முதலுக்கு மேல் 

லாபம் வந்தால் போதும் என்பதுதான் மார்க்கெட் நிலவரம். அந்த கணக்கின்படிதான் மேலே குறிப்பிடப்பட்டுள்ள படங்கள் 

அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படங்கள் ஓடாமல் போக ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது சினிமாக்காரர்கள் வழக்கம். அதன்படி கடந்த 

காலங்களில் குறிப்பிட்ட குடும்ப ஆதிக்கத்தை சொல்லி வந்தார்கள். ஆனால் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து இத்தனை நாட்களில் 

வெளியான படங்களில் ஒரே ஒரு படம்... தெய்வ திருமகள் மட்டுமே தேறியுள்ளது.

இப்போது யாருடைய ஆதிக்கமும் இல்லாத நிலையில், வெளியாகும் படங்கள் ஓரளவு வசூலையாவது எடுத்திருக்க 

வேண்டும் அல்லவா? ஏன் முடியவில்லை?

"குடும்ப ஆதிக்கம், டிவி ஆதிக்கம்... இப்படி ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், நல்ல சரக்குள்ள படம் சந்தையில் யார் 

தயவும் இல்லாமல் ஓஹோவென்று ஓடும். அதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இயக்குநர்கள் நல்ல படங்களை 

உருவாக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும். ஆனால் அவர்களோ ஆயிரம் அரசியல் பண்ணிக்கொண்டு படைப்பாற்றலை 

இழந்து விடும் போக்கு உள்ளது. தோல்விக்கு அடுத்தவரை நோக்கி விரல் நீட்டாமல், தங்கள் தவறை உணர்ந்து கதைகளை 

உருவாக்க வேண்டும்," என்கிறார் விநியோகஸ்தர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர்.

தயாரிப்பாளர் ஒருவரிடம் இதுகுறித்து பேசினோம். 

2011-ல் இதுவரை வெளியான எந்தப் படமும் ஹீரோக்களுக்காகவோ, ஹீரோயிசத்துக்காகவோ ஓடவில்லை. ஆனால் 

இன்னும் கூட ஹீரோயிசத்தோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தனுஷ் போன்ற ஹீரோக்கள். தமிழ் சினிமா சாண் 

ஏறினால் முழம் சறுக்கக் காரணம் இதுவே. இந்த நிலை மாற வேண்டும். அது இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது. 

பலர் அவன் இவன் படத்தை விமர்சித்தாலும் அந்தப் படம் வெகுஜன ரசனையைத் திருப்திப்படுத்தியது. ஓரளவு லாபமும் 

கிடைத்தது. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு தமிழை விட நன்றாக சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. வித்தியாசம் மற்றும் 

ரசனைக்குத் தீனிபோடும் சமாச்சாரங்கள் நிறைய வேண்டும்," என்றார்.

இயக்குநர்கள் யோசிப்பார்களா?

by
A_S

கார்த்தி ஜோடி அனுஷ்கா,கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் அனுஷ்கா,கார்த்தி - அனுஷ்கா நடிக்கும் புதிய படம்... 11-11-11-ல் தொடங்கியது!

அயனில் சூர்யா ஜோடியாக தமன்னா நடித்தார். உடனே சிறுத்தையில் அவரை கார்த்தி ஜோடியாக்கினார்கள். சிங்கத்தில் 

சூர்யா ஜோடியாக நடித்தார் அனுஷ்கா. அவசரமாக அவரையும் கார்த்தி ஜோடியாக்கி படப்பிடிப்பையும் 

தொடங்கியிருக்கிறார்கள்.

கேரளாவிலுள்ள சாலக்குடியில் 11-11-11 அன்று இந்தப் படப்பிடிப்பு தொடங்கியது. படத்தின் பெயரை இன்னும் 

அறிவிக்கவில்லை. கார்த்தியின் குடும்ப உறுப்பினர் ஞானவேல்ராஜா தயா‌ரிக்கிறார். சுரா‌ஜ் படத்தை இயக்குகிறார்.

சென்ற வருடமே கார்த்தி சுரா‌ஜ் இயக்கத்தில் நடித்திருக்க வேண்டும். சிறுத்தை குறுக்கே வந்ததால் இவர்கள் இணையும் 

படம் தள்ளிப் போனது குறிப்பிடத்தக்கது.

சகுனி படத்திற்கு பிறகு கார்த்தி நடிக்கும் படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டது.

ஷங்கர் தயாள் இயக்கும் சகுனி படத்துக்கு பிறகு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நாயகன் 

கார்த்தி நடிக்கிறார்.

இந்த ஓக்ஸன்-கொமெடி படத்தின் மூலமாக அனுஷ்கா-கார்த்தி இருவரும் முதல் முறையாக 

இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப்படத்துக்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் பட வேலையை வேகமாக 

தொடங்கியுள்ளது 

படக்குழு. சாலக்குடியில் பெரிய மரப்பங்களா செட் போட்டுள்ளார் கலை இயக்குநர் பிரபாகரன்.

முதல் கட்ட படப்பிடிப்பில் கார்த்தி-அனுஷ்கா ஜோடி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க 

திட்டமிட்டுள்ளார்கள். சிலம்பாட்டம் படத்தை இயக்கிய சரவணன் இந்தப்படத்துக்கு 

கமெராமேனாக 

பணியாற்றுகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இது இயக்குனர் சுராஜ் படமாக ஓக்சனும் கொமெடியும் 

கலந்து 

இருக்கும். நாயகன் கார்த்திக்கு இணையான கதாபாத்திரத்தில் நாயகி அனுஷ்கா நடிக்கிறார் 

என்கிறது பட வட்டாரம்.

Karthi and Anushka
கார்த்திக்குடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா, முதல்முறையாக. இன்னும் பெயர் 

சூட்டப்படாத 

இந்தப் படத்தை இயக்குகிறார் தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ். 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட 11-11-11அன்று 

தொடங்கியது.

பருத்திவீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்த ஸ்டுடியோ கிரீன் 

நிறுவனத்தின் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி - அனுஷ்காவுடன், 

சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.கார்த்தியும் சந்தானமும் இணைந்த சிறுத்தை ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் 

பெற்றது. அடுத்து சகுனியிலும் 

கார்த்தியுடன் இணைந்துள்ளார் சந்தானம். 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்துக்காக மரத்தால் ஆன பிரமாண்டமான 

பங்களா செட் அமைத்துள்ளார் ஆர்ட் டைரக்டர் பிரபாகர். சாலக்குடியில் 20 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது.

by
A_S

Thursday, 10 November 2011

அப்பா கலங்கினார்… சூர்யா நெகிழ்ச்சி

அப்பா கலங்கினார்… சூர்யா நெகிழ்ச்சி 
- 08.11.2011
By A_S

பாராட்டுக்கள், விமர்சனங்கள் என இரண்டு பக்கங்களையும் சந்தித்துவிட்டது '7ஆம் அறிவு'. படம் வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் சூர்யா. எவ்வளவு கேள்வி வேண்டுமானாலும் கேளுங்க என்று தயாரான சூர்யா, அதற்கு முன்பாக பத்து நிமிடம் இடைவெளி இல்லாமல் பேசியதிலிருந்து…..

"மக்கள் தீர்ப்பு, மகேசன் தீர்ப்பு இரண்டையுமே மதிக்கிறேன். 7ஆம் அறிவுக்கு கொடுத்துள்ள விமர்சனங்களை தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன். நான் நடிக்க வந்து 13 வருஷமாச்சு. முதல் படம் பண்ணும்போது, "எனக்குன்னு ஒரு மார்க்கெட், பிஸினெஸ் இருக்கும் இவ்வளவு பெரிய வளர்ச்சியை எட்டிப்பிடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. சினிமா துறையில் பெரிய லெஜண்டாக இருக்கும் ஒருவர் படம் பார்த்துவிட்டு "இந்த படம் பற்றி ஏன் இப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை. ஆரம்பத்தில் நானும் மற்றவர்கள் சொன்னதை கேட்டு படம் எப்படி இருக்குமோ என்றுதான் நினைத்தேன். என் பையன்தான் படத்திற்கு அழைச்சிட்டு போனான். ரொம்ப பிரமாதம்" என்று பாராட்டினார்" என்ற சூர்யா, கேள்விகளுக்கு தயாரானார்.

நீங்க தியேட்டருக்கு போய் படம் பார்த்தீங்களா?

"இன்னும் இல்லீங்க. இத்தனை வருடம் ஆன பிறகும் தியேட்டரில் முதல் நாளில் ஆடியன்சுடன் சேர்ந்து படம் பார்க்கும் தைரியம் எனக்கு வரவில்லை. ஒரு படம் முடிந்த பிறகு எனக்குள்ளே இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமோ என்ற தாழ்வு மனப்பான்மைதான் வரும்."

உங்க படத்தை விஜய் பார்த்தாரா? விஜய் படத்தை நீங்க பார்த்தீங்களா?

"அவரு பார்த்தாரான்னு தெரியல. ஆனா விஜய் மிஸ்ஸஸ் பார்த்துட்டாங்க. ஜோதான் அவங்களுக்கு டிக்கெட் எடுத்துகொடுத்து எல்லோரும் ஒண்ணா சேர்ந்து படம் பார்த்திருக்காங்க. படம் பார்த்துட்டு ஒரு படத்துல இவ்வளவு உழைப்பான்னு சொல்லியிருக்காங்க. வேலாயுதம் படத்தை நான் இன்னும் பார்க்கல. ஆனா இரண்டு படமும் நல்லா போவதை நினைத்தால் சந்தோஷமா இருக்கு"

ரஜினி படம் பார்த்துட்டு என்ன சொன்னார்?

"தியேட்டரிலிருந்து வெளியே வந்ததும், தோளில் கை போட்டு பாராட்டிவிட்டு வேகமா நடந்து போய் காரில் ஏறி கிளம்பினார். கமல் சார் படம் பார்க்கும்போது நான் ஊர்ல இல்ல. "பையன் நல்ல ஃபார்ம்ல இருக்கான்ல" என்று சொன்னதாக கேள்விப்பட்டேன். இப்போ நான் பெசண்ட் நகரில் வீடு கட்டி போயிட்டேன். வாரத்துல இரண்டு நாள் தி.நகர் வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவோட சாப்பிடுவிட்டு போவோம். அப்பா படம் பார்த்துட்டு பெசண்ட் நகர் வீட்டுக்கு நேரா வந்துட்டார். என்னை பாராட்டியபோது அவர் கண் கலங்கினார். எனது இத்தனை வருட கேரியரில் அவர் என்னை கண்கலங்கி பாராட்டியது இதுதான் முதல் முறை."

அடுத்து?

"கே.வி.ஆனந்த் சாருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படம் பண்றேன். 7ஆம் அறிவைவிட ஒருபடி மேலான படமாக இருக்கும். எனக்கு தெரிந்து அதுபோன்ற ஒரு பாத்திரத்தில் இதுவரை யாரும் நடித்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்"


by

A_S

கமல் மகளுடன் நடிப்பதில் சூர்யாவிற்கு தயக்கம்

கமல் மகளுடன் நடிப்பதில் சூர்யாவிற்கு தயக்கம்
[ Tuesday, 08 November 2011, 09:17.43 PM GMT +05:30 ]
சூர்யாவும் கமல் மகள் ஸ்ருதியும் ஜோடியாக நடித்த 7ஆம் அறிவு படம் தீபாவளிக்கு வெளியாகி

ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தை குறித்து சூர்யா அளித்த பேட்டியில் 7ஆம் அறிவு படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகின்றது.

நான் நடித்த படங்களிலேயே "சிங்கம்" தான் அதிகம் வசூல் ஈட்டியது. அந்த வசூலை "7ஆம் 

அறிவு" படம் பத்து நாட்களில் தாண்டி சாதனை படைத்துள்ளது.

நிறைய பாராட்டுகளும் குவிகின்றன. ரஜினி படம் பார்த்து கட்டிபிடித்து வாழ்த்தினார், கமலும் 

பாராட்டினார்.

நான் புது வீடு கட்டி வருகிறேன், இதனால் தற்காலிகமாக பெசன்ட் நகரில் வசிக்கிறேன், படம் 

பார்த்த உடன் என் தந்தை சிவகுமார் அந்த வீட்டுக்கு வந்தார், என்னை கட்டிப்பிடித்து 

கண்கலங்கினார்.

அது அப்பா எனக்கு கொடுத்த பெரிய பாராட்டு. கமல் மகள் ஸ்ருதிக்கு வலுவான கதாபாத்திரம், 

அவருக்கு என்னை விட படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது என்றார்.

கதைப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை இயக்குனர் கொடுத்து 

இருக்கிறார்.

போதி தர்மரை சீனாவிலும், ஜப்பானிலும் தெய்வமாக வணங்குகின்றனர். தற்கால தமிழ் இளைஞர்கள் சிந்தனைகள் வேறு 

மாதிரியாக இருக்கின்றது. அவர்களை நமது பழைய கலாச்சாரத்துக்கு கொண்டு வர இந்த படம் பயன்பட்டு உள்ளது 

என்றார்.

ஸ்ருதி கமல் மகள் என்பதால் அவருடன் நெருங்கி நடிக்க பயம் இருந்தது. அவர் நடந்து வந்தாலே கமல்சார் வந்த மாதிரி 

இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளில் இருந்து மீண்டு வந்தேன்.படம் இறுதி காட்சியில் சண்டை 

பயிற்ச்சியில் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார்.

விஜய்யின் "வேலாயுதம்" படம் இன்னும் பார்க்கவில்லை. இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடுகின்றன.

அடுத்து குடும்பபாங்கான படங்களில் நடிக்க உள்ளேன்.17ம் நூற்றாண்டு சரித்திர படமொன்றிலும் நடிக்க பிரபல இயக்குனர் 

ஒருவரிடம் கதை கேட்ட இருக்கிறேன்.

விஜய் ரசிகர் மன்றத்துக்கு கொடி இருப்பது போல் உங்கள் ரசிகர்களுக்கு கொடி கொடுப்பீர்களா என்று கேட்கின்றனர்.

ஆனால் கொடி வைத்து ரசிகர் மன்றத்தை வளர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று சூர்யா கூறினார்.


by

A_S

ரகிகர் மன்ற கொடியா? அப்படி ஒரு ஐடியாவே இல்லை... சூர்யா

ரகிகர் மன்ற கொடியா? அப்படி ஒரு ஐடியாவே இல்லை... சூர்யா
 
           7ஆம் அறிவு படத்தின் வெற்றி உற்சாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் சூர்யா.  பல்வேறு கேள்விகளுக்கு சிரித்த முகமாக பதில் கூறினார். தனது படங்களின் கதைகளை யாருடனும் பகிர்ந்துகொள்வதில்லை, யார்கிட்ட சொன்னானும் தகவல் எப்படியாவது வெளியே வந்துவிடுகிறது என்றார்.

 

தன் அப்பா சிவகுமார் படம் பார்த்து விட்டு பெசன்ட் நகரில் இருக்கும் தன் வீட்டிற்கு வந்து கட்டியணைத்து கண்கலங்கினார், இந்த மாதிரி அனுபவத்தை தன் தந்தையிடம் இருந்து முதல் முறை பெறுவதாக கூறினார்.  

ஏழாம் அறிவு படம் பார்க்க நான் ரஜினியை அழைத்ததும், ரஜினி உடனே ஒப்புக் கொண்டார்.  ரஜினி சார், சிவாஜி சார் குடும்பத்துடன் இணைந்து படத்தை பார்த்து ரசித்த பின் கைகொடுத்து கட்டியணைத்து விட்டு சென்றார் என்றார்.

கமல் படம் பார்க்கும்போது நான் அங்கே இல்லை. கமலின் பிறந்த நாளன்று அவரை வாழ்த்த கமல் வீட்டிற்க்கு சென்ற போது, கமல் படம் பார்க்கும் போது "பையன் ஃபுல் ஃபார்ம்ல இருக்கான்" என்று கூறியதாக வைரமுத்து சொன்னார். 'இத நீங்க சொல்வீங்கனு நான் எதிர்பார்க்கல' என்று கூறி கமல் நகைத்தார் என்று கமலின் கமெண்ட்ஸை பகிர்ந்துகொண்டார். 

விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை. அவர் இன்னும் 7ஆம் அறிவு படம் பார்க்கவில்லை. நானும் இன்னும் வேலாயுதம் படம் பார்க்கவில்லை. இரண்டும் வேற வேற மாதிரியான படம். ஒரு படம் கலர்ஃபுல்லா இருக்கும் போது, வித்யாசமான முயற்சி என்று இன்னொரு படம் இருப்பது நல்லது தானே என்று கொஞ்சம் வார்த்தைகளை நழுவவிட்டார். இரண்டு படமுமே நன்றாக ஓடுவது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினார்.

இலங்கையில் சில வசனங்கள், குறிப்பாக தமிழர்கள் விடுதலை சம்பந்தமான வசனங்களை நீக்கி உள்ளனர். இந்த விஷயத்தில் ஒரு அரசாங்கத்தை எதிர்க்க ஒரு தனி மனிதனாக எனக்கு சக்தி இல்லை என்றே நினைக்கிறேன்.  படத்திலிருந்து சில தகவல்களை தணிக்கை என்ற பெயரில் தடுத்து நிறுத்தினாலும், படத்தில் கூறப்பட்ட தகவல்கள் தமிழ் மக்களை சென்றடைந்தது மகிழ்ச்சியாக உள்ளாது. 

உங்க ரசிகர்கள் மன்றங்களுக்கு எப்போ தனியா கொடி கொடுக்க போறீங்கன்னு கேட்டா? அய்யயோ... அப்படி ஒரு ஐடியாவே இல்லீங்னா... இதுவே போதும்! நல்லாத் தானே போய்கிட்டு இருக்கு என்று வடிவேலு கணக்கா ஜகா வாங்கினார் சூர்யா.

by
A_S

Tuesday, 8 November 2011

Surya becomes one of the highest paid actors in India

Surya is now officially the 2nd highest paid actor in South India after Rajinikanth and puts him ahead by a mile with respect to his competitors. 

Surya's take home remuneration stands at Rs. 24 Crores that he received for Maatraan (including Telugu Rights). This is at least 10 Crores higher 

than the nearest competitors such as Ajith and Vijay in that order. Surya's years of dedication in slowly building his Telugu market since Ghajini has 

paid rich dividends now. This huge gap in remuneration will be difficult to close by both Ajith and Vijay since they haven't made

much inroads in Telugu Industry, which is the wild card when it comes to BO collections these days.

BY

A_S

Anushka - Amala Paul pairs Suriya for Singam 2

Anushka - Amala Paul pairs Suriya for Singam 2

 | 
https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/301410_106973619416121_103790466401103_57117_727034159_n.jpg

Latest update on Singam 2 related to news.
The 'Singam' pair is ready to roar again. In a film to be directed by Hari with Suriya, Anushka Shetty and Amala Paul will be the two leading ladies. This has been confirmed by the director, who is at present busy giving finishing touches to the script.


"It is a two-heroine subject and we have signed Anushka as one of the heroines," says Hari, who had earlier worked with Suriya in movies such as 'Aaru', 'Vel' and 'Singam'. "The film will go on floors very soon," the movie maker says.

If Hari manages to bring together Anushka and Amala Paul, this will be second time for the actresses to come together, for they had shared the screen space with Vikram in 'Deiva Thirumagal' earlier this year. At that time, both declared that they had become very good friends.

In the meantime, Suriya is currently working with KV Anand for 'Maatraan', which is touted to be a cutting edge commercial entertainer. He is romancing Kajal Aggarwal for the first time in this movie produced by Kalpathi S Aghoram of AGS Entertainment.

by

A_S