கமல் மகளுடன் நடிப்பதில் சூர்யாவிற்கு தயக்கம் |
[ Tuesday, 08 November 2011, 09:17.43 PM GMT +05:30 ] |
சூர்யாவும் கமல் மகள் ஸ்ருதியும் ஜோடியாக நடித்த 7ஆம் அறிவு படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. |
இந்த படத்தை குறித்து சூர்யா அளித்த பேட்டியில் 7ஆம் அறிவு படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகின்றது. நான் நடித்த படங்களிலேயே "சிங்கம்" தான் அதிகம் வசூல் ஈட்டியது. அந்த வசூலை "7ஆம் அறிவு" படம் பத்து நாட்களில் தாண்டி சாதனை படைத்துள்ளது. நிறைய பாராட்டுகளும் குவிகின்றன. ரஜினி படம் பார்த்து கட்டிபிடித்து வாழ்த்தினார், கமலும் பாராட்டினார். நான் புது வீடு கட்டி வருகிறேன், இதனால் தற்காலிகமாக பெசன்ட் நகரில் வசிக்கிறேன், படம் பார்த்த உடன் என் தந்தை சிவகுமார் அந்த வீட்டுக்கு வந்தார், என்னை கட்டிப்பிடித்து கண்கலங்கினார். அது அப்பா எனக்கு கொடுத்த பெரிய பாராட்டு. கமல் மகள் ஸ்ருதிக்கு வலுவான கதாபாத்திரம், அவருக்கு என்னை விட படத்தில் முக்கியத்துவம் இருக்கிறது என்றார். கதைப்படி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை இயக்குனர் கொடுத்து இருக்கிறார். போதி தர்மரை சீனாவிலும், ஜப்பானிலும் தெய்வமாக வணங்குகின்றனர். தற்கால தமிழ் இளைஞர்கள் சிந்தனைகள் வேறு மாதிரியாக இருக்கின்றது. அவர்களை நமது பழைய கலாச்சாரத்துக்கு கொண்டு வர இந்த படம் பயன்பட்டு உள்ளது என்றார். ஸ்ருதி கமல் மகள் என்பதால் அவருடன் நெருங்கி நடிக்க பயம் இருந்தது. அவர் நடந்து வந்தாலே கமல்சார் வந்த மாதிரி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளில் இருந்து மீண்டு வந்தேன்.படம் இறுதி காட்சியில் சண்டை பயிற்ச்சியில் ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளார். விஜய்யின் "வேலாயுதம்" படம் இன்னும் பார்க்கவில்லை. இரண்டு படங்களுமே வெற்றிகரமாக ஓடுகின்றன. அடுத்து குடும்பபாங்கான படங்களில் நடிக்க உள்ளேன்.17ம் நூற்றாண்டு சரித்திர படமொன்றிலும் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவரிடம் கதை கேட்ட இருக்கிறேன். விஜய் ரசிகர் மன்றத்துக்கு கொடி இருப்பது போல் உங்கள் ரசிகர்களுக்கு கொடி கொடுப்பீர்களா என்று கேட்கின்றனர். ஆனால் கொடி வைத்து ரசிகர் மன்றத்தை வளர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை என்று சூர்யா கூறினார். by A_S |
Thursday, 10 November 2011
கமல் மகளுடன் நடிப்பதில் சூர்யாவிற்கு தயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment