Monday 31 October 2011

கருத்துக் கணிப்பு இதில் எது சூப்பர்?

இதில் எது சூப்பர்?
வேலாயுதம்
Votes28.63%

ஏழாம் அறிவு
Votes36.92%

இரண்டுமே
Votes4.94%

இரண்டுமே மோசம்
Votes13.82%

இன்னும் இந்தப் படங்களை பார்க்கவில்லை
Votes15.69%

by

A_S

வேலாயுதமா... ஏழாம் அறிவா... உங்க 'ஓட்டு' யாருக்கு?

குறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த தீபாவளிக்கு கடைசியில் மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் அறிவும்தான்.

விஜய்யின் கேரியரில் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக காத்திருக்கிறார்கள்.

அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி சரவெடியாக வந்துள்ளது படம் என்கிறார் இயக்குநர் ராஜா. இவர் விஜய்க்காக இயக்கும் முதல் படம் என்பதால் நம்பிக்கையுடன் படத்தை வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.

விஜய் படம் அதிரடி மாஸ் மசாலா வகை என்றால், இந்தப் பக்கம் முருகதாஸ் தன் வழக்கமான கிளாஸிக் + மாஸ் அப்பீலோடு உருவாக்கியுள்ள படம் ஏழாம் அறிவு. ஆரம்ப நாளில் இந்தப் படம் பற்றி சாதகமான கருத்துக்கள் வெளியானாலே போதும், படம் பிய்த்துக் கொண்டு ஓடும் (வசூலில்தாங்க!) என்பது பாக்ஸ் ஆபீஸ் கருத்து.

சூர்யாவின் அபார உழைப்பு, சீனா, தாய்லாந்து என கலர்ஃபுல் லொகேஷன்கள், ஹீரோயின் ஸ்ருதி... அனைத்துக்கும் மேல், முருகதாஸ் எனும் கடின உழைப்பாளியின் மீதான நம்பிக்கை இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பையும் அட்வான்ஸ் புக்கிங்கையும் எகிர வைத்துள்ளது. அறிவிக்கப்பட்ட அரங்குகளிலெல்லாம் அட்வான்ஸ் புக்கிங் குறித்த விசாரணை இப்போதே ஆரம்பமாகிவிட்டது.

இந்த இரு படங்களில் எது உங்கள் சாய்ஸ்... எந்தப் படம் இந்த தீபாவளி ரேஸில் அசத்தல் வெற்றியை ஈட்டித் தரப்போகிறது? ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் எந்தப் படம் இருக்கும் என்கிறீர்கள்?

by

A_S

உலகமே கொண்டாடும் தமிழனை உள்ளூரில் யாருக்கும் தெரியவில்லையே! - ஏ ஆர் முருகதாஸ் வேதனை


உலகமே கொண்டாடும் தமிழ் சாதனையாளர் போதி தர்மனைப் பற்றி உள்ளூர் தமிழர்கள் ஒருவருக்கும் தெரியவில்லையே, என வேதனைப்பட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

சூர்யா-சுருதிஹாசன் ஜோடியாக நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்துள்ள படம் 7-ஆம் அறிவு. பெரும் பொருட்செலவில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். படம், தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

இதையொட்டி சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், "1,600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் வாழ்ந்த போதி தர்மன் என்ற பல்லவ மன்னர் பரம்பரை இளவரசன், பின்னாளில் உலகம் முழுக்க பயணித்தான். அவனே பின் சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை அங்கே நிறுவினான்.

அங்கே எங்கே பார்த்தாலும் போதிதர்மனுக்கு சிலைகள் உள்ளன. சீனாவின் புகழ்பெற்ற ஷோலின் கோயிலில் தமிழரான போதி தர்மனின் சிலையைப் பார்த்து சிலிர்த்துவிட்டேன்.

சீன மாணவர்கள் போதியை பாடமாகவே படிக்கிறார்கள். புத்த சமயத்தின் குருவாக அவரை மதிக்கிறார்கள். அவர் படைத்த சாதனைகள் கொஞ்சமல்ல. இவ்வளவு பெருமையும் புகழும் கொண்ட ஒரு தமிழனைப் பற்றி அவன் பிறந்த காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல, தமிழ் சமூகத்துக்கே தெரியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் எனக்கு உள்ளது.

இனி வரும் தலைமுறையினர் போதி தர்மன் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்ட வேண்டும். இவ்வளவு பெரிய சாதனையாளனுக்கு சிலை எழுப்பி அவன் புகழைப் பரப்ப வேண்டும்.

சூர்யா இந்த படத்துக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருந்தார். நிறைய பேருக்கு அந்த பரந்த மனசு வராது. சுருதிஹாசன், சுபா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சுபாவையும், சுருதியையும் என்னால் பிரித்துப் பார்க்க முடியவில்லை," என்றார்.

சூர்யா

படத்தின் நாயகன் சூர்யா பேசுகையில், "போதி தர்மனை, பாதி உலகம் கடவுளாக கொண்டாடி கொண்டிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் போதி தர்மனை பற்றிய தடயங்களே அழிக்கப்பட்டு விட்டன. அவருடைய புகழ் மறக்கடிக்கப்பட்டு விட்டதால், யாரும் இதுபற்றி படம் எடுக்கவில்லை.

அவரை பற்றிய புத்தகங்களை படித்துவிட்டு, டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் தூக்கமின்றி தவித்தார். இந்த படத்தில் நடிப்பதற்காக, சில தற்காப்பு கலை பற்றிய பயிற்சி பெறுவதற்காக வியட்நாம் சென்றேன். அங்கே 80 வயது பாட்டி, சிலம்பம் சுற்றிக்கொண்டிருந்தார். மிரண்டு போனேன்.

அங்கே சர்க்கரை நோய் மருந்து விற்பதில்லை என்று கேள்விப்பட்டேன். அந்த மருந்து அங்கே தேவைப்படவில்லை.

படத்தில் எனக்கு ஸ்ருதிஹாசன்தான் ஜோடி என்றதும் வெடவெடத்துப் போனேன். அவர், கமல்ஹாசனின் மகள் என்பதால், பதற்றமாக இருந்தது. எனக்கு இணையான கதாபாத்திரம் அவருக்கு.

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ்ப்பட உலகில் ஒரு முக்கிய இடம் த்துக்கொண்டிருக்கிறது,'' என்றார்.

பேட்டியின்போது, பட அதிபர் உதயநிதி ஸ்டாலின், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.

7-ஆம் அறிவு படத்தின் பெரும்பகுதி சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

by

A_S

ஏழாம் அறிவு படம் எப்டி இருக்கு!

தீபாவளிக்கு வெளியான ஏ.ஆர்.முருகதாஸ்-சூர்யா கூட்டணி படமான ஏழாம் அறிவு படத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு சென்னையில் டிக்கெட் இல்லை. இந்தப் படத்துக்கான புக்கிங் ஓபன் ஆனவுடனேயே அடுத்த ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இதனால் சூர்யாவின் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் ஏமாற்றமே என்றாலும், இன்னொரு பக்கம் தங்களது 'தலைவரின்' படத்துக்கான டிக்கெட்டுகள் இவ்வளவு வேகத்தில் விற்றுவிட்டதில் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியாகியுள்ள இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியே வந்து கொண்டுள்ளன. ஒரு சிலர் ஆகா.. ஓஹோ என்கின்றனர். மற்றவர்கள், ரொம்ப எதிர்பார்த்துப் போனேன்.. அந்த அளவுக்கு ஒன்னுமில்லை என்கின்றனர்.

சீக்கிரமா திரும்பி வந்து விமர்சனத்தை எழுதுப்பா (தீபாவளி லீவுன போன) ஷங்கர்!.

நமது விமர்சனம் வெளியாகும் வரை.. படம் குறித்த உங்கள் கருத்துக்களை எழுதுங்களேன்...

by
A_S

படம் தோல்வி அடைந்தால் நான் ஓடிஒளிவது இல்லை-விஜய் பேட்டி



 1/1 

 

சென்னை, அக்.- 30 - படம் தோல்வி அடைந்தால் ஓடி ஒளிவது இல்லை என்கிறார் நடிகர் விஜய்.நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது.  இதுகுறித்து நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் நடிச்ச 52 படங்களை விட `வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கின்றனர். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார். ஜெயம்ரவியும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார். ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்சு கொடுத்தார். விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம். படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூட்டுறாங்க. இது படம் ஹிட்டானதற்கு அறிகுறி. எம்.ஜி.ஆர். பார்முலா படத்தில் உள்ளது என்கின்றனர். எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவர். அது தவறு அல்ல. எம்.ஜி.ஆர். பாணியில் நடிக்க நல்ல கதை அமையணும். அது `வேலாயுதம்' படத்தில் இருக்கு. கிளைமாக்சில் கூட்டத்தினர் பிடித்து வரும் கொடிகள் எனது மக்கள் இயக்க கொடி அல்ல. அடுத்து நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும். இண்டர்நெட்டில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது. அதை தடுக்க எனது இண்டர்நெட் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். புதுப்படங்களை இது போல் இண்டர்நெட்டில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. `காவலன்' படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். வெற்ஹி தோல்வி சகஜம் தான், வெற்றி பெற்றால் சந்தோஷம் தான், தோல்வி அடைந்தால் நான் ஓடி ஒளிவது இல்லை. அந்த நேரத்தில் நான் பேசினால் சரியாக இருக்காது என்றார் விஜய்.


by


A_S

Sunday 23 October 2011

Surya 7Aum Arivu censor details

Surya 7Aum Arivu censor details

Singam Surya's upcoming bi-lingual in Tamil and Telugu, 7Aum Arivu received clean U certificate from censor board. The film is directed by Murugadoss and produced byUdayanidhi Stalin. According to the producer, the film was made on a budget of Rs 84 crore.

The movie is hitting the screens on October 26 on the eve of Diwali in over 1000 screens worldwide. Shruti Haasan is romancing Surya in this science fiction film.Harrish Jayaraj has composed the music for this film.

The makers are planning to dub the movie in Hindi too. In this film, Surya plays the role of a circus artist and a Buddhist Monk Bodhidharma. Surya trained to get a six pack abs for a fight sequence within 16 days, upon cinematographer Ravi K Chandran's request.

BY

A_S

ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறிப்புகள்!

போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் 

கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!

காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!

முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் 

பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.

புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த 

வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு 

சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் 

உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. 

கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் 

பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ 

உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் 

கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் 

மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... இப்படிப் போகிறது போதியின் கதை.

இந்தக் கதைதான் சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. போதியின் ஜீன்களைப் பயன்படுத்தி, நவீன 

மருத்துவமுறையில் சாதனைகளைச் செய்வதாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் முக்கிய காட்சிகளை சீனா, தாய்லாந்து என போதி தர்மன் வாழ்ந்த இடங்களிலேயே எடுத்திருப்பதுதான் ஏழாம் அறிவின் 

சிறப்பு.

தகவல்களைப் படிக்கும்போதே படம் குறித்து ஏக எதிர்ப்பார்ப்பு உருவாகிறதல்லவா... எதிர்ப்பார்ப்பை பொய்யாக்க மாட்டார் 

முருகதாஸ் என நம்புவோம்!

BY

A_S

கார்த்தி படத்தில் 'சர்ச்சை' நிகிதா!

கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நடிகை நிகிதா தற்போது கார்த்தியுடன் ஜோடி சேரவிருக்கிறார்.

கன்னட நடிகர் தர்ஷனின் குடும்பத்தில் குழப்பதை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு கன்னட சினிமாவில் 3 ஆண்டுகள் நடிக்க நடிகை நிகிதாவுக்கு தடைவிதிக்கப்பட்டது. பின்னர் கன்னட பிரபலங்கள் குறுக்கீட்டால் தடை விலகியது. இந்நிலையில் படிக்காதவன், மாப்பிள்ளை ஆகிய படங்களை இயக்கிய சூரஜ்-ன் அடுத்த படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேர்கிறார் நிகிதா.

இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் கார்த்தியுடன் அனுஷ்கா நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக நிகிதா வருகிறார். இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகு இந்த படம் கிடைத்திருக்கிறதே, அதில் உங்கள் கதாபாத்திரம் பற்றி சொல்லுங்களேன் என்தற்கு,

நான் கிராமத்து பெண்ணாக வருகிறேன். தற்போதைக்கு அவ்வளவு தான் சொல்ல முடியும் என்றார்.

கார்த்தி தற்போது சகுணியில் நடித்து வருகிறார். அது முடிந்தவுடன் சூரஜ் தன் படத்தை துவங்குவார் என்று கூறப்படுகிறது.

தர்ஷன் பிரச்சனை முடிந்தபிறகு நிகிதாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்...

BY

A_S

சூர்யா - கார்த்தியை இயக்குகிறார் வெங்கட் பிரபு?

அஜீத்துக்கு மங்காத்தா வெற்றியைக் கொடுத்தாலும், மது விருந்தில் நடந்த சோனா விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டார் இயக்குநர் வெங்கட் பிரபு.

இப்போது, அதைச் சரிகட்டும் விதத்தில் மெகா பட்ஜெட் படம் ஒன்றை இயக்கும் வேலையில் மும்முரமாக உள்ளார்.

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன்தான் தயாரிப்பாளர். ஹீரோ?

சூர்யா அல்லது அவர் தம்பி கார்த்தி இருவரில் ஒருவராக இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் இந்த இருவரில் ஒருவரை இயக்குவது பெரிய விஷயமில்லை. இருவரையுமே ஒரு கதையில் இணைப்பதுதான் சவால். வர்த்தகமும் பெரிதாக இருக்கும் என்கிறாராம் வெங்கட் பிரபு.

ஏற்கெனவே அஜீத், அர்ஜூன் என இரு பெரிய ஹீரோக்களை திறமையாக இணைத்து வெற்றி கண்டவர் என்பதால், வெங்கட் பிரபுவின் இந்த ஐடியாவும் பரிசீலனையில் உள்ளதாம்!

விரைவில் படம் குறித்த தெளிவான விவரங்கள் வெளியாகும் என்கிறார்கள். அதுவரை, வதந்திக்கு பஞ்சமிருக்காதல்லவா!!

BY

A_S

கார்த்தி நடிக்கும் சகுனியில் 'நீரா ராடியா'!

திருமணத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படம் சகுனி. வழக்கம்போல காமெடி அல்லது ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல், இதில் அரசியல் விவகாரங்களையும் சேர்த்துள்ளார்களாம்.

2 ஜி வழக்கில் பரபரப்பாகப் பேசப்பட்ட நீரா ராடியாவின் கதை இந்தப் படத்தில் இடம்பெறுகிறது. திரைக்கதையே நீரா ராடியாவை மையப்படுத்தித்தான் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீரா ராடியாவின் கதையை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல், ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நீரா ராடியா சம்பந்தமான பகுதியை மட்டும் இப்படத்தில் சேர்த்துள்ளனராம்.

கிட்டத்தட்ட படத்தின் வில்லியாக நீரா ராடியா பாத்திரம் வருகிறதாம். கேரக்டருக்கும் நாயகன் கார்த்திக்கும் இடையிலான மோதல், அரசியல் தொடர்புகள் ஆட்சி மாற்றம் போன்றவற்றை விறுவிறுப்பாக படமாக்கியுள்ளார்களாம். சங்கர் தயாள் இப்படத்தை இயக்குகிறார். இதில் கார்த்திக்கின் ஜோடியாக பிரணிதா நடித்துள்ளார்.

கார்த்தி நடிக்கும் முதல் சீரியஸ் - அரசியல் படம் சகுனி!

BY

A_S

தீபாவளிப் படங்கள் - ஒரு பார்வை

அக்டோபர் 23, 2011,
இந்த தீபாவளிக்கு எத்தனை படங்கள் வெளியாகும்? இந்தக் கேள்வியை கடந்த ஒரு மாத காலமாக கேட்டு வருகிறார்கள் சினிமாக்கார்களும் பத்திரிகையாளர்களும். ஆனால் சரியான பதில் நஹி!

காரணம் தியேட்டர்கள் பற்றாக்குறை (விரிவான தகவல்கள் இன்னொரு கட்டுரையில்!)

இந்த தீபாவளிக்கு தமிழில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகின்றன. அவை விஜய் நடித்துள்ள வேலாயுதம், சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு. இவற்றுடன் மோதப் போவதாக அறிவித்த தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி படங்கள் பல்வேறு காரணங்களைக் கூறி விலகிக் கொண்டன (எனக்கு உடம்பு சரியில்லை - மயக்கம் என்ன இயக்குநர் செல்வராகவன்!).

வேலாயுதம்

விஜய் நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கில் வெளியான நாகார்ஜுனா படமொன்றின் தழுவல். ரீமேக் புகழ் ஜெயம் ராஜா முதல் முறையாக தன் வீட்டு ஹீரோ ரவியை விடுத்து, வெளி ஹீரோ ஒருவரை வைத்து எடுத்துள்ள படம். விஜய்க்கு இந்தப் படம் ஓடியே தீர வேண்டிய கட்டாயம். எனவே எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் உள்ளது.

ஜெனிலியா - ஹன்ஸிகா என இரு நாயகிகள், விஜய் ஆன்டனி இசை. பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் ட்ரெயிலர் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஏழாம் அறிவு

சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு, ஏ ஆர் முருகதாஸின் படைப்பு. சூர்யாவை விட முருகதாஸ் மீதுள்ள நம்பிக்கை இந்தப் படக்கும் அபார எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் இரண்டு பாடல்களும், ட்ரெயிலரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நிஜம். கமல் மகள் ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம்.

தமிழகத்தின் பெருமளவு நல்ல திரையரங்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்திருப்பது இன்னொரு ப்ளஸ். அரசியலில் ஆயிரம் மாற்றங்கள் நடந்தாலும், எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக திகழ்வதால் உதயநிதி ஸ்டாலின் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கிடைத்துள்ளது. படம் குறித்து முதல்நாள் வரும் 'மவுத் டாக்'தான் ரொம்ப முக்கியம் என்று நம்புகிறார் முருகதாஸ்.

ரா ஒன்

வேலாயுதம், ஏழாம் அறிவை விட, பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படம் ரா ஒன். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை... சூப்பர் ஸ்டார் ரஜினி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். தன் கேரக்டருக்கு தானே டப்பிங் பேசியும் உள்ளார். எனவே தங்கள் தலைவரின் தரிசனம் காணவும் குரலைக் கேட்கவும் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் அவரது லட்சோப லட்சம் ரசிகர்கள். இவர்கள் அத்தனை பேரும் ஒரே ஒரு முறை இந்தப் படத்தைப் பார்த்தால் போதும், ரா ஒன் பாக்ஸ் ஆபீஸில் ஏ ஒன்னாகிவிடும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்!

சென்னையில் மட்டும் 30 அரங்குகளில் ரா ஒன் தமிழ் மற்றும் இந்தி வெளியாகிறது. எல்லாமே உயர்தரமான அரங்குகள். தவிர தமிழகத்தின் முக்கிய நகரங்களிலெல்லாம் இந்தப் படம் வெளியாகிறது. ஷாரூக்கான் போட்ட முதல் தமிழகத்தில் மட்டுமே வசூலாகிவிடும் வாய்ப்புள்ளது. இன்னும் ஆந்திராவில் கேட்கவே வேண்டாம். ஹைதராபாதில் மட்டும் 80 அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்!

இந்த தீபாவளி ரேஸில் வழக்கம் போல ஓரிரு சிறு பட்ஜெட் படங்கள் வெளியாகும் வாயாப்புள்ளது. இவை வெற்றியை குறிவைத்து வெளியாவதில்லை. தீபாவளி வாரத்தின் கடைசி 5 நாள் வசூலை குறிவைத்து இறக்கப்படுபவை
!

விஜய் - சூர்யாவின் தீபாவளி ரிலீசால் முடங்கிய 15 புதுப்படங்கள்!

அக்டோபர் 23, 2011,
Dhanush and Richa
தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள வேலாயுதம் மற்றும் சூர்யா நடித்த 7 ஆம் அறிவு ஆகிய இரு படங்கள் வெளியாவதால், 15-க்கும் மேற்பட்ட புதிய படங்கள் முடங்கியுள்ளன.

7 ஆம் அறிவு 340-க் கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் 40 அரங்குகள் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளன.

வேலாயுதம் சுமார் 300 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இவ்விரு படங்களும் தமிழகம் முழுவதும் கூடுதல் தியேட்டர்களை பிடித்துக்கொண்டதால் வேறு படங்களுக்கு தியேட்டர்களே கிடைக்கவில்லை.

இதனால் தீபாவளிக்கு ரிலீசாகாமல் 15 படங்கள் முடங்கியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கவலை தெரிவித்தனர். தனுஷின் மயக்கம் என்ன படம் முன்பே முடிந்துவிட்டாலும், தியேட்டர் இல்லாததால்தான் வெளியாகவில்லை.

சிம்பு நடித்துள்ள ஒஸ்தி, அங்காடி தெரு மகேஷ் நடித்த கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம், தாண்டவக்கோனே உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்காகத்தான் தயாராகின. ஆனால் தியேட்டர்கள் கிடைக்காத நிலையில் அவை தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

தீபாவளிக்குப் பிந்தைய வாரங்களில் வெளியிடலாம் என்றாலும் திரையரங்குகள் இல்லை என்று கைவிரித்துவிட்டார்களாம். எனவே வேலாயுதம், ஏழாம் அறிவு இரண்டும் முதலிரு வாரங்களில் எத்தனை தியேட்டர்களில் தூக்கப்படுகிறதோ அதைப் பொறுத்தே புதிய படங்களின் வெளியீட்டுத் தேதி முடிவாகும்.

ஷாருக்கானின் ரா ஒன் படம் மட்டும் விஜய், சூர்யா படங்களுடன் தீபாவளிக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு 20 தியேட்டர்கள் சென்னையிலும் புறநகர்களிலும் கிடைத்துள்ளன.

இது இந்தியில் இருந்து தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. பெரும்பாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. 

7 ஆம் அறிவு படத்துக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. வேலாயுதம் படத்துக்கு விரைவில் முன்பதிவு தொடங்கவுள்ளது.

BY
A_S

rating of ticket in highest movies

by
A_S

தீபாவளி ஸ்பெஷல்: ஒரு வாரத்துக்கு தமிழக திரையரங்குகளில் தினசரி 5 காட்சி

Full Movies on YouTube  www.youtube.com/kuchkuchhotahai

சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி ஒரு வார காலத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தீபாவளி பண்டிகை முதல் 26.10.11-ல் இருந்து 1.11.2001 வரை 7 நாட்களுக்கு தியேட்டர்களில் காலை காட்சி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தமிழக மக்கள் தொன்றுதொட்டு கொண்டாடி வரும் பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. அந்த பண்டிகை நாளில் சினிமா பார்த்து மகிழ வேண்டும் என்பது அவர்கள் விருப்பமாக உள்ளது. அவர்கள் எளிதாக படம் பார்க்க வசதியாக கூடுதல் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படடு இருந்தது.

அதை ஏற்று முதல்வர் அனுமதி வழங்கியமைக்கு நன்றி. 

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன. தீபாவளியையொட்டி 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளது.
by
A_S

நடிகர் கமல்ஹாசன் பார்வையில் வெங்கட்பிரபு

நடிகர் கமல்ஹாசன் பார்வையில் வெங்கட்பிரபு
[ Saturday, 22 October 2011, 01:50.13 PM GMT +05:30 ]
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனை வைத்து கொமெடி படம் தயாரக்கிறார்கள்.

மங்காத்தாவில் ஜாக்பாட் அடித்தாலும் சோனா விவகாரத்தில் மங்கிப் போயிருந்த வெங்கட்பிரபுவின் கேரியரில் இப்போது மீண்டும் சந்தோஷத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் இவர் கமல்ஹாஸனை சந்தித்துப் பேசியுள்ளதுதான், ஒரு வயிறு குலுங்க வைக்கும் கொமெடிப் படத்துக்காக இருவரும் இணைகிறார்கள்.

இளம் தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது கமலின் ஆசை.

இளம் தலைமுறை ப்ளஸ் விறுவிறு கொமெடி இதற்கு வெங்கட்பிரபு பிரேம்ஜி டீம் பக்காவாக பொருந்தும் என்பதால், வெங்கட்டை அழைத்துப் பேசினார் கமல் என்கிறார்கள்.

சூர்யா வைத்து தன் அடுத்த படத்தை இயக்கும் வெங்கட்பிரபு, அந்தப் படம் முடிந்ததும் கமல் படத்தை ஆரம்பிப்பார் என்று கூறியுள்ளார்.


by

A_S

Wednesday 19 October 2011

தீபாவளிப் படங்கள் – ஒரு பார்வை

October 13, 2011
இந்த தீபாவளிக்கு எத்தனை 
படங்கள் வெளியாகும்? இந்தக் 
கேள்வியை கடந்த ஒரு மாத 
காலமாக 
கேட்டு வருகிறார்கள் 
சினிமாக்கார்களும் 
பத்திரிகையாளர்களும். ஆனால் 
சரியான பதில் நஹி!
காரணம் தியேட்டர்கள் பற்றாக்குறை (விரிவான தகவல்கள் 
இன்னொரு கட்டுரையில்!)
இந்த தீபாவளிக்கு தமிழில் இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே 
வெளியாகின்றன. அவை விஜய் 
நடித்துள்ள வேலாயுதம், சூர்யா நடித்துள்ள ஏழாம் அறிவு. 
இவற்றுடன் மோதப் போவதாக அறிவித்த 
தனுஷின் மயக்கம் என்ன மற்றும் சிம்புவின் ஒஸ்தி படங்கள் 
பல்வேறு காரணங்களைக் கூறி விலகிக் 
கொண்டன(எனக்கு உடம்பு சரியில்லை – மயக்கம் என்ன 

இயக்குநர் செல்வராகவன்!)
வேலாயுதம்

விஜய் நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கில் வெளியான 

நாகார்ஜுனா படமொன்றின் தழுவல். ரீமேக் புகழ் ஜெயம் ராஜா 

முதல் 
முறையாக தன் வீட்டு ஹீரோ ரவியை விடுத்து, வெளி 

ஹீரோ ஒருவரை வைத்து எடுத்துள்ள படம். விஜய்க்கு இந்தப் 

படம் ஓடியே தீர வேண்டிய கட்டாயம். எனவே எதிர்ப்பார்ப்பு 

பெரிய அளவில் உள்ளது.



ஜெனிலியா – ஹன்ஸிகா என இரு நாயகிகள், விஜய் ஆன்டனி 

இசை. பாடல்கள் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் 

ட்ரெயிலர் 


பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஏழாம் அறிவு
சூர்யா 

நடித்துள்ள ஏழாம் அறிவு, ஏ ஆர் முருகதாஸின் படைப்பு. 

சூர்யாவை விட 



முருகதாஸ் மீதுள்ள நம்பிக்கை இந்தப் படக்கும் அபார 

எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் இரண்டு 

பாடல்களும், 



ட்ரெயிலரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது நிஜம். கமல் 

மகள் ஸ்ருதிக்கு தமிழில் இது முதல் படம்.
தமிழகத்தின் 

பெருமளவு 



நல்ல திரையரங்குகள் இந்தப் படத்துக்குக் கிடைத்திருப்பது 

இன்னொரு ப்ளஸ். அரசியலில் ஆயிரம் மாற்றங்கள் 

நடந்தாலும், 



எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக திகழ்வதால் உதயநிதி 

ஸ்டாலின் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சிவப்புக் கம்பள 

வரவேற்பு 


கிடைத்துள்ளது. படம் குறித்து முதல்நாள் வரும் 'மவுத் 

டாக்'தான் ரொம்ப முக்கியம் என்று நம்புகிறார் முருகதாஸ்.
ரா 

ஒன்
சூப்பர் 



ஸ்டார் ரஜினி இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார். 

தன் கேரக்டருக்கு தானே டப்பிங் பேசியும் உள்ளார். எனவே 

தங்கள் 



தலைவரின் தரிசனம் காணவும் குரலைக் கேட்கவும் பெரும் 

ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் அவரது லட்சோப லட்சம் 

ரசிகர்கள். 



இவர்கள் அத்தனை பேரும் ஒரே ஒரு முறை இந்தப் படத்தைப் 

பார்த்தால் போதும், ரா ஒன் பாக்ஸ் ஆபீஸில் ஏ ஒன்னாகிவிடும் 



என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்!
வேலாயுதம், ஏழாம் அறிவை 

விட, பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் படம் ரா ஒன். காரணம் 

சொல்லித் 



தெரிய வேண்டியதில்லை… 
சென்னையில் மட்டும் 30 

அரங்குகளில் ரா ஒன் தமிழ் மற்றும் இந்தி வெளியாகிறது. 

எல்லாமே 



உயர்தரமான அரங்குகள். தவிர தமிழகத்தின் முக்கிய 

நகரங்களிலெல்லாம் இந்தப் படம் வெளியாகிறது. ஷாரூக்கான் 

போட்ட முதல் 




தமிழகத்தில் மட்டுமே வசூலாகிவிடும் வாய்ப்புள்ளது. இன்னும் 

ஆந்திராவில் கேட்கவே வேண்டாம். ஹைதராபாதில் மட்டும் 80 



அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிடுகின்றனர்!
இந்த 

தீபாவளி ரேஸில் வழக்கம் போல ஓரிரு சிறு பட்ஜெட் படங்கள் 



வெளியாகும் வாயாப்புள்ளது. இவை வெற்றியை குறிவைத்து 

வெளியாவதில்லை. தீபாவளி வாரத்தின் கடைசி 5 நாள் 

வசூலை 



குறிவைத்து இறக்கப்படுபவை!



by



A_S