Wednesday 19 October 2011

வேலாயுதமா… ஏழாம் அறிவா.

October 17, 2011

குறைந்தது 5 படங்களாவது வெளியாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட இந்த தீபாவளிக்கு கடைசியில் 

மிஞ்சியிருப்பது விஜய்யின் வேலாயுதமும் சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் உருவாக்கியுள்ள ஏழாம் 

அறிவும்தான்.

விஜய்யின் முக்கியமான படமாகப் பார்க்கப்படுகிறது வேலாயுதம். காவலன் வெற்றிப் படம் என்றாலும், 

அதற்கு முந்தைய தோல்விகளை ஈடுகட்டும் அளவுக்கு மெகா வெற்றிப்படமல்ல என்பது சினிமா 

வர்த்தகர்கள் கருத்து. விஜய் ரசிகர்களும் போக்கிரி மாதிரி ஒரு சூப்பர் ஹிட் படத்துக்காக 

காத்திருக்கிறார்கள்.

அவர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி சரவெடியாக வந்துள்ளது படம் என்கிறார் இயக்குநர் ராஜா. இவர் 

விஜய்க்காக இயக்கும் முதல் படம் என்பதால் நம்பிக்கையுடன் படத்தை வாங்கியுள்ளனர் விநியோகஸ்தர்கள்.

விஜய் படம் அதிரடி மாஸ் மசாலா வகை என்றால், இந்தப் பக்கம் முருகதாஸ் உருவாக்கியுள்ள படம் ஏழாம் அறிவு.

சூர்யாவின் அபார உழைப்பு, சீனா, தாய்லாந்து அனைத்துக்கும் மேல், முருகதாஸ் எனும் கடின உழைப்பாளியின் மீதான நம்பிக்கை.


by


A_S

No comments:

Post a Comment